நீலகிரி மாவட்டம் உதகைக்கு சென்னையை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் சுற்றுலா வந்தனர். அப்போது பிங்கர்போஸ் பகுதியில் எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட காரை ஓரமாக ஒதுக்கியபோது பள்ளத்தில் விழுந்ததில் அங்கிருந்த வீட்டின் மேல்கூரை மீது அந்த கார் பாய்ந்து நின்றது. காரில் பயணித்தவர்கள், வீட்டில் இருந்தவர்கள் எவ்வித காயமின்றி தப்பியதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். வீட்டின் உள்ளே இருந்தவர்கள் அலறி அடித்து ஓடினார்கள். நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.