உத்திரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்த ஹரி ஸ்வரூப் (40) என்பவரின் கை விரலில் பாம்பு கடித்துள்ளது. ஆனால் அவர் பயப்படாமல் தைரியமாக அந்த பாம்பை பிடித்து பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். பாம்பை கண்டதும் மருத்துவமனையில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த பாம்பை காட்டி மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்றார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக கூறப்படுகிறது.