பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொள்கிறார். ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கார்கே கலந்து கொள்வார் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. முன்னதாக இந்தியா கூட்டணி தலைவர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.