மதுரையை மேல்கள்ளந்திரி சேர்ந்த மகாலட்சுமி கணவனைப் பிரிந்த நிலையில், அவருக்கு சசிகுமார் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று இருவரும் கொடைக்கானல் தனியார் விடுதியில் இரவில் தங்கியுள்ளனர். அப்போது உணவுடன் விஷத்தையும் சாப்பிட கொடுத்த சசி, அங்கிருந்து தப்பியுள்ளார். விடுதி உரிமையாளர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அறையில் இருந்த கைப்பேசியை சோதித்ததில் மகாலட்சுமி தன்னுடைய வீட்டாருக்கு இறக்கப்போவதாக வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது.