இந்திய சந்தையில், பெரும்பாலான மக்கள் குறைந்த விலையில் பைக்குகள் வாங்க விரும்புகின்றனர். அந்த வகையில், ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா, டிவிஎஸ் மற்றும் பஜாஜ் போன்ற நிறுவனங்களின் ரூ.70,000 வரையிலான வாகனங்களை பார்க்கலாம். அதன்படி, பஜாஜ் பிளாட்டினா 100 - ரூ.68,685, ஹீரோ மோட்டோகார்ப் இன் HF டீலக்ஸ் - ரூ.59,998, TVS XL100 - ரூ.44,999 - ரூ.60,905, ஹீரோ எச்எஃப் 100 - ரூ.59,018, ஹோண்டா ஷைன் 100 - ரூ.64,900 என குறைந்த விலையில் பைக்குகள் விற்பனையாகிறது.