மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம். பாறைப்பட்டியைச் சேர்ந்த அய்யர் பாண்டிக்கும்(40) இவரது சித்தப்பா பெரியகருப்பன் (60) என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில். நேற்றிரவு (21.02.2024) 9 மணியளவில் இருவருக்கும் மது போதையில் தகராறு ஏற்பட்டதில் பெரியகருப்பன் கத்தியால் குத்தியதில் அய்யர்பாண்டி உயிரிழந்தார். இது தொடர்பாக எழுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.