AI தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய மரண கடிகாரம் என்கிற ஆப் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. 5.3 கோடி பங்கேற்பாளர்களின் உதவியுடன் 1200க்கும் மேற்பட்ட ஆயுட்கால ஆய்வு தரவுகளின் அடிப்படையில் AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. உணவு முறை, உடற்பயிற்சி, மன அழுத்தம் பற்றிய தகவல்களை பயன்படுத்தி மரணம் நிகழ்வதற்கான சாத்தியமான தேதியை கணிக்கிறது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்துள்ளனர்.