மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மாருதி நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (32). இவரது உறவினர் ரோஹித்துடன் கர்நாடகாவில் முறுக்கு உற்பத்தி செய்யும் தொழில் செய்து வந்தார். இந்த தொழிலில் ரூ. 10 லட்சம் வரை நஷ்டமானது. இதனால் ஊருக்கு திரும்பிய இவர் தனது மனைவியிடம் நகையை கேட்க, அவர் தர மறுத்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான சதீஷ்குமார் நேற்று(செப்.28) பூச்சி மருந்து குடித்துள்ளார்.
இதை அறிந்த உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று(செப்,29) உயிரிழந்தார். இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.