வேன் , லாரி மோதல். 15 பேர் காயம்

64பார்த்தது
வேன் , லாரி மோதல். 15 பேர் காயம்
மதுரை, ஜூன் 10: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வேன் மீது தனியார் பேருந்து மோதியதில் 15 பேர் பலத்த காயமடைந்தனர்.

உசிலம்பட்டியிலிருந்து மதுரைக்கு நேற்று மாலை தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்தப் பேருந்து செல்லம்பட்டி அருகே வந்தபோது, உறப்பனூருக்கு துக்க வீட்டுக்குச் சென்று விட்டு திரும்பிய வேன், அந்தப் பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது வேன் மீது பேருந்து மோதிவிட்டு, சாலையருகே இருந்த தேநீர்க் கடைக்குள் புகுந்தது.

இந்த விபத்தால் வேனில் பயணம் செய்த பிரவியம்பட்டியைச் சேர்ந்த மலையாண்டி, பாபு, செல்லம், பாண்டியம்மாள், கணேசன், பாண்டி, சுந்தரபாண்டி, பேருந்தில் பயணம் செய்த மீனாகுமாரி உள்பட 15-க்கும் மேற் பட்டோர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு, உசிலம்பட்டி, மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வாலாந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி