1960-களில் லிவர்பூல் கால்பந்து அணிக்கு 6 கோப்பைகளை பெற்றுக் கொடுத்த புகழ்பெற்ற வீரர் ரான் யீட்ஸ் காலமானார். அவருக்கு வயது 86. யீட்ஸ் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். லிவர்பூல் சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், "முன்னாள் கேப்டன் ரான் யீட்ஸின் மறைவுக்கு லிவர்பூல் எஃப்சி துக்கம் அனுசரிக்கிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்களுக்கும், ரசிகர்களின் துக்கத்தில் பங்கு கொள்கிறோம் என கூறியுள்ளது.