ஒரு மொழியில் வார்த்தைகளை எழுதவும், படிக்கவும் தெரிந்திருப்பது எழுத்தறிவு எனப்படுகிறது. இதை வலியுறுத்தும் வகையில் 1966ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்.8ம் தேதி ‘உலக எழுத்தறிவு தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. அடிப்படை எழுத்தறிவை கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்த்துவதும் சர்வதேச எழுத்தறிவு தினத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.