வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் 19 வயது பயிற்சி செவிலியரிடம் கடந்த ஆகஸ்ட் 30-ல் பாபு என்ற மருத்துவர் இடது கையைப் பிடித்து இழுத்து, வக்கிரமாக நடந்துகொண்டிருக்கிறார். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் பாபுவை அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பாபுவை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் ராஜமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.