திருப்பரங்குன்றம் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

71பார்த்தது
திருப்பரங்குன்றம் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா நேற்று (ஜன., 29) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவில் தினமும் சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் அன்னம், சேஷ, தங்க மயில், பச்சைக் குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலிப்பார். பிப்., 6ஆம் தேதி ரத வீதிகளில் தேரோட்டம் மற்றும் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறும். 7ஆம் தேதி காலை‌ கோலாகலமாக தெப்பத்திருவிழா நடைபெறும்.

தொடர்புடைய செய்தி