தடகள விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட பதக்கங்கள் வென்ற மதுரை மாவட்ட காவல் துறையினரை மாவட்ட எஸ். பி பாராட்டினார்.
கோயம்புத்தூர் மாவட்டம் நேரு ஸ்டேடியத்தில் நடந்த Inter-Zonal Athletic Cycling & Kho - Kho Cluster 2023 விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு விளையாட்டு போட்டி வெற்றி பெற்ற ராமசாமி சார்பு ஆய்வாளர் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் விளையாட்டு போட்டியில் இரண்டு தங்கங்கள் வென்றும், சந்துரு த. கா. 926 நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்றும், ராஜா த. கா. 868 குண்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றும், கார்த்திகேயன் த. கா. 1481, 400 மீட்டர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்கள். விளையாட்டுப் போட்டியில் பதக்கம் பெற்ற காவலர்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ் அவர்கள் நேரில் அழைத்து உற்சாகப்படுத்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.