நிலையூர்: கல்லூரி மாணவி மாயம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் அங்கையர்கண்ணி காலனியில் வசிக்கும் சரவணனின் மகள் சந்தியா (19) என்பவர் வடபழஞ்சியில் உள்ள செந்தாமரை கல்லூரியில் முதலாம் ஆண்டு பிகாம் (சி.ஏ.) படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் (நவ.4) கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை சரவணன் நேற்று (நவ.5) ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் மகளைக் காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.