மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விரதம் கடந்த 2ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் மூன்றாம் நாளான நேற்று (நவ. 4) இரவு முருகன் பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விரதமிருந்து வரும் பக்தர்கள் அரோகரா அரோகரா கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர். வரும் 7மதேதி சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.