திருநகர்: ஆக்கிரமிப்புகள் அகற்றம். பரபரப்பு.

77பார்த்தது
மதுரை திருப்பரங்குன்றத்தில் பழங்காநத்தம் முதல் தனக்கன்குளம் வரை உள்ள சாலையை அகலப்படுத்தி உறுதிப்படுத்தும் சாலை பணி நெடுஞ்சாலை துறையினரால் கடந்த எட்டு மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் சாலையில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான காலியிடம் மற்றும் ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றப்பட்டு வருகிறது. நேற்று (நவ. 5) திருநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு எதிரே உள்ள 12 வணிக வளாக கட்டிடங்கள் நெடுஞ்சாலைத் துறையினரால் இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு இடிக்கப்பட்டு கடைகள் அகற்றப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடை உரிமையாளர்கள் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வணிக வளாகக் கடைகளை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அதிகாரிகள் இடித்து தரைமட்டம் ஆக்கிவிட்டனர். இந்த இடத்தில் கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கு மேலாக முறையாக அட்வான்ஸ் கட்டி மாதம் வாடகை செலுத்தி வருகிறோம். ஆனால் அதிகாரிகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென அரை மணி நேரத்தில் பொருள்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். இதனால் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. திருப்பரங்குன்றம் டிஎஸ்பி குருசாமி தலைமையில் காவலர்கள் குவிக்கப்பட்டு கடை உரிமையாளர்களை அப்புறப்படுத்தினார். பின்னர் நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி