வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார் மாயம்.

81பார்த்தது
வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார் மாயம்.
மதுரை அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை தேனி மெயின் ரோடு ஹெச்எம்எஸ் காலனியில் வசிக்கும் ரஞ்சித் குமார் (27) என்பவர் டிரைவராக உள்ளார். இவர் தனது மாருதி சுசூகி காரினை மதுரை அச்சம்பத்து மாப்பிள்ளை விநாயகர் நகர், பத்மா நகரிலுள்ள தனது நண்பர் கார்த்திக் என்பவரின் வீடு முன் 10 ம்தேதி இரவு நிறுத்தியுள்ளார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது கார் காணாமல் போயிருந்தது.

இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி