போதையில் ஆட்டோ, டூவீலர், கார்களை சேதபடுத்திய வாலிபர்கள்.

79பார்த்தது
மதுரை அருகே சாமநத்தத்தில் போதையில் இளைஞர்கள் டூவீலர், பொது சொத்துக்களை சேதப்படுத்தினார்கள்.

மதுரை அருகே சாமநத்தம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த ஞாயிறு அன்று ஊராட்சியின் கமிட்டி சார்பாக கபடி போட்டி நடந்தது. அன்று இரவு கபடி போட்டியின் வரவு செலவு பார்ப்பதற்காக அந்த ஊர் கமிட்டியினர் அந்த ஊராட்சியில் உள்ள நூலகத்தில் ஒன்று கூடினார்கள். அங்கு கஞ்சா மற்றும் மது போதையில் இளைஞர்கள் கட்டைகள், இரும்பு ஆயுதங்கள், வாள் , அரிவாள் ஆகியவற்றுடன் வந்து கமிட்டி மீட்டிங் நடக்கும் பகுதிக்கு வந்தனர். பின்னர் போதையில் கிராம ஊராட்சியின் தண்ணீர் தொட்டி, மின் இரும்பு பலகைகள் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர்கள், கார் கண்ணாடிகள் மற்றும் ஆட்டோ கண்ணாடிகளை உள்ளிட்டவைகளை வாள் மற்றும் அரிவாளால் அடித்து உடைத்து தப்பி விட்டனர். இது தொடர்பாக சாமநத்த கிளார்க் கண்ணன் சிலைமான் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்து சிலைமான் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் வாள் மட்டும் அரிவாளை பயன்படுத்தி பொது சொத்துக்களை சேதப்படுத்திய ஈடுபட்டது சாமநத்தம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (22), வினோத்குமார் (20) வசந்த் (19) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள தினேஷை (18) சிலைமான் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி