மதுரை திருப்பரங்குன்றத்தில் காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு தின பேரணி உறுதிமொழி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் குருசாமி போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.
மதுரை திருப்பரங்குன்றம் காவல் துறை சார்பில் திருப்பரங்குன்றம் நுழைவாயிலில் இருந்து போலீசார் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் இணைந்து போதை விழிப்புணர்வு பேரணி மற்றும் போதை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
திருப்பரங்குன்றம் நுழைவாயில் இருந்து பெரிய ரத வீதி மேல ரத வீதி கீழரத வீதி வழியாக போதை பொருள் இளைஞர்களுக்கும், நாட்டுக்கும் கேடு. போதைப் பொருளை தவிர்ப்போம், இளைஞர் நலன் காப்போம், என்ற கோஷத்துடன் பேருந்து நிலையம் சென்று நிறைவு செய்தனர்.