முருகப்பெருமானை தரிசனம் செய்த சீன நாட்டு பக்தர்கள்.

66பார்த்தது
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சீன நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று மாலை நேரத்தில் சீன நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சுப்பிரமணிய சுவாமி கோவில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆண் பக்தர்கள் காவி வேட்டி அணிந்தும், பெண் பக்தர்கள் தமிழக பாரம்பரிய உடையான சேலை அணிந்தும் சுப்பிரமணிய சுவாமி கோவில் கருவறையில் உள்ள முருகப்பெருமானை தரிசித்துவிட்டு திரும்பி செல்லும் பொழுது கோவிலுக்குள் உள்ள வல்லப கணபதி சன்னதி முன்பு தோப்புக்கரணம் போட்டு விநாயகரை வழிபட்டனர்.

இதில் சீன நாட்டைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவருக்கு ஆண் பக்தர் விநாயகரை எப்படி வழிபட வேண்டும் என சொல்லிக் கொடுத்து தோப்புக்கரணம் போட வைத்து சாமி தரிசனம் செய்ய வைத்தார். சீன நாட்டினர் தமிழ் முறைப்படி முருகப்பெருமானை தரிசிக்க காவி வேட்டி மற்றும் சேலை அணிந்து வந்த சீன நாட்டினரை வியப்புடன் பார்த்த கோவிலுக்கு வந்த பக்தர்கள்

தொடர்புடைய செய்தி