
பேரையூர்: கேரளா லாட்டரி சீட்டுகளை விற்ற மூவர் கைது
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சாப்டூரில் விற்பனை செய்த அதே ஊரைச் சேர்ந்த பிச்சையாண்டி, பஞ்சவர்ணம், டி. பாறைப்பட்டியை சேர்ந்த முருகன் ஆகிய மூவர் மீது நேற்று (ஏப் 13)போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடம் இருந்து 187 லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.