திருமங்கலம்: 10 ஆயிரம் பணத்தை திருடும் திருடன். வீடியோ

51பார்த்தது
மதுரை மாவட்டம் திருமங்கலம் கற்பக நகரை சேர்ந்த வேல்முருகன் (52) என்பவர் தள்ளு வண்டியில் கடலை வியாபாரம் பார்த்து வருகிறார். இவர் தினமும் தள்ளு வண்டியில் கடலையை திருமங்கலம் பேருந்து நிலையத்திற்கு கொண்டு சென்று வியாபாரம் செய்து விட்டு பின்னர் வீடு திரும்புவார். வழக்கம்போல (31. 3. 25) அன்று வியாபாரத்தை முடித்துவிட்டு தனக்கு தெரிந்த நபரிடம் பண தேவைக்காக பத்தாயிரம் ரூபாய் தவணையாக பெற்றுக் கொண்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
திருமங்கலம் கற்பக நகர் ராகாஷ் ரெஸ்டாரண்ட் அருகே உள்ள தண்ணீர் குழாயில் வழக்கம்போல் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தார் இதனை நோட்டமிட்ட திருடன் வேல்முருகன் தவணைக்காக வாங்கி வைத்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை கல்லாப்பெட்டியுடன் திருடி சென்றான்.

பாத்திரத்தை கழுவி விட்டு திரும்பி வந்த பார்த்த வேல்முருகன் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த திருமங்கலம் டவுன் போலீசார் திருடன் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தள்ளுவண்டியில் கடலை வியாபாரம் செய்பவரை பின்தொடர்ந்து வந்து கல்லாப்பெட்டியுடன் பத்தாயிரம் பணத்தை தூக்கிச் சென்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி