திருமங்கலம் - Thirumangalam

திருமங்கலம்: பல் டாக்டர் மர்ம மரணம்

திருமங்கலம்: பல் டாக்டர் மர்ம மரணம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் முன்சீப் கோர்ட் ரோட்டில் தனியார் பல் மருத்துவமனையில் பல் மருத்துவராக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாலன்நகரை சேர்ந்த ஜஸ்டின் செல்லத்துரை என்பவரது மகள் ஜெனிஷா (25) என்பவர் பணியாற்றி வந்தார். ஜெனிஷா மருத்துவமனை கட்டிடத்தின் மாடியில் தங்கி பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் (நவ. 5) இரவு பணி முடித்து தனது அறைக்கு சென்றவர் நேற்று காலை பணிக்கு வரவில்லை. வெகு நேரம் ஆகியும் பணிக்கு வராததால் மருத்துவமனை பணியாளர்கள் மாடியில் சென்று பார்த்த போது அவர் தங்கியிருந்த அறை கதவு பூட்டப்பட்டிருந்தது.  கதவைத் தட்டிப் பார்த்தபோது கதவு திறக்கப்படவில்லை. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது டாக்டர் ஜெனிஷா மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை அறிந்து வந்த மருத்துவரின் தந்தை ஜஸ்டின் செல்லத்துரை மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా