சேறும் சகதியுமாக மாறிய: ஆட்டுச் சந்தை

55பார்த்தது
சேறும் சகதியுமாக மாறிய: ஆட்டுச் சந்தை
சேறும் சகதியுமாக மாறிய: ஆட்டுச் சந்தை


திருமங்கலம் நகராட்சி ஆட்டுச் சந்தை மழையால் சேறும் சகதியுமாக மாறியதால், நடுரோட்டில் ஆட்டு வியாபாரம் நடந்தது.

இதனால் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இச்சந்தை சந்தைப்பேட்டை பகுதியில் உள்ளது. நகராட்சிக்கு அதிக வருமானம் தரும் இனமாக உள்ளது. கடந்தாண்டு இச்சந்தை ரூ. 50 லட்சத்திற்கும் மேல் ஏலம் போனது.

ஒவ்வொரு வாரமும் ரூ. ஒரு கோடிக்கும் மேல் ஆட்டு வியாபாரம் நடைபெறும். விசேஷ நாட்களில் இது ரூ. 5 கோடியை தாண்டும். பல ஆயிரம் பேர் வந்து செல்லும் இச்சந்தையில் குடிநீர், கழிப்பறை என அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. மழையால் ஆட்டுச் சந்தைக்குள்
சேறும் சகதியுமாக மாறி நடமாட லாயக்கற்றதாகிவிட்டது. இதனால் வியாபாரிகள் ஆடுகளை ரோட்டில் வைத்து வியாபாரம் செய்கின்றனர்.

நகராட்சியினர் சந்தையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி