மக்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்

64பார்த்தது
மக்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்
திருமங்கலம் மேலக்கோட்டையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் முகாம் நடந்தது.

இதில் நடுக்கோட்டை, மேலக்கோட்டை, கீழக்கோட்டை, கரிசல்பட்டி, வடகரை உள்ளிட்ட 10 கிராம மக்கள் மனு அளித்தனர். எரிசக்தித் துறை, ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வருவாய் துறை உள்ளிட்ட 27 துறைகள் சார்பில் தனித்தனி ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. தாசில்தார் ராமச்சந்திரன் உட்பட அதிகாரிகள் மனுக்களை பெற்றனர். ஊராட்சி தலைவர்கள் காளம்மாள், கோட்டூர் குருவலட்சுமி, கோபி, ஆறுமுகம் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி