தவெக தலைவர் விஜய்யும், விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும் திமுகவை விமர்சித்திருந்த நிலையில், அவர்களுக்கு ஆர்.எஸ். பாரதி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் மன்னராட்சி நடைபெறுவதாக சிலர் கூறுகிறார்கள். மக்கள் தேர்ந்தெடுத்தால்தான் யாராக இருந்தாலும் இங்கு ஆள முடியும். நேற்று முளைத்தவன் எல்லாம் திமுகவுக்கு சவால் விடுகிறான். திமுகவை எதிர்ப்பவன் மண்ணோடு மண்ணாகி விடுவான் என அவர் கூறினார்.