அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் பொங்கல் பண்டிகை அன்று இப்படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. இந்நிலையில், டந்த 2 தினங்களுக்கு முன்பு டப்பிங் பணியை தொடங்கி இருந்த நடிகர் அஜித் தற்போது அதனை முடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.