உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மருத்துவமனையின் லிஃப்ட் அறுந்து விழுந்து கரிஷ்மா (30) என்ற பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண்ணுக்கு குழந்தை பிறந்ததால், வேறு வார்டுக்கு மாற்றுவதற்காக லிஃப்ட்டில் அழைத்து சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது. நலமுடன் உள்ள குழந்தை வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் மருத்துவர், மேலாளர், ஊழியர்கள் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.