கூட்டணி அமைப்பதில் விசிகவிற்கு பேராசை இல்லை - திருமா

75பார்த்தது
கூட்டணி அமைப்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பேராசை இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் தடாலடியாக கூறியுள்ளார். அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய திருமாவளவன், "அங்கே போனால் அள்ளலாமா, இங்கே போனால் வாரலாமா என்றெல்லாம் நினைப்பதில்லை. கூட்டணி நிலைப்பாட்டில் விசிக தெளிவாக உள்ளது. கூட்டணி விவகாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை பின்பற்றுமாறு சிலர் அறிவுரை கூறுகின்றனர். எதை எந்த நேரத்தில் எப்படி அணுக வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்" என்று கூறியுள்ளார்.

நன்றி: SUN NEWS

தொடர்புடைய செய்தி