சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் ஒரு இளம்பெண் நியூஸ் பேப்பரை வைத்து புடவை கட்டுவது இடம்பெற்றுள்ளது. புடவையை கட்டி வீடியோவை வெளியிட்டிருக்கும் இவரது பெயர் பார்வதி. இவர், பல்வேறு செய்தி தாள்களை வைத்து இந்த புடவையை செய்திருக்கிறார். இதன் ஹைலைட் என்னவென்றால், அந்த புடவை பார்ப்பதற்கு மிகவும் ரியல் ஆக இருக்கிறது. இந்த வீடியோ, வெளியிட்ட 4 மணி நேரத்திலேயே பல மில்லியன் வியூஸ்களை எடுத்திருக்கிறது.