கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி கடையடைப்பு

76பார்த்தது
கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி கடையடைப்பு
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. திருமங்கலம் நகர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், 400-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என நேற்று (ஜூலை 29) அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருந்தார். ஆனால் எழுத்துப்பூர்வ அறிவிப்பு வரவில்லை எனக்கூறி திட்டமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி