மயான பகுதியிலிருந்த நடுகற்கள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்

63பார்த்தது
மயான பகுதியிலிருந்த நடுகற்கள்  போலீஸ் பாதுகாப்புடன்  அகற்றம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மயானத்தில் இருந்த நடுகற்கள் நேற்று (செப்.,14) போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கீழக்கோட்டையில் மேலக்கோட்டை, நடுவகோட்டை, கிரிகவுண்டன்பட்டி, மல்லம்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த குறிப்பிட்ட சமுதாயத்திற்கான மயானம் உள்ளது. அஸ்தியுடன் நடு கற்களை கீழக்கோட்டையில் நட்டு வணங்கி வந்தனர்.

சுடுகாடு அருகே கொண்டம்மாள் கோயில் ஒன்று உள்ளது. கோவிலுக்கு செல்லும் பாதையிலும், முன் பகுதியிலும் உள்ள நடு கற்கள் சாமி கும்பிடுவதற்கு இடையூறாக உள்ளது என்று கிழவனேரி திருக்குமரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதன் அடிப்படையில் நடுகற்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் நேற்று (செப்.,14) ஆர்.டி.ஓ. , சாந்தி, தாசில்தார் மனேஷ்குமார் தலைமையில் அங்கிருந்த நடுகற்கள் அகற்றப்பட்டன. அப்போது காவல் ஆய்வாளர் விஜயகாந்த் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தொடர்புடைய செய்தி