கேரளா செல்லும் பேரையூர் ஆட்டுச்சாணம்

62பார்த்தது
கேரளா செல்லும் பேரையூர் ஆட்டுச்சாணம்
கேரளா செல்லும் பேரையூர் ஆட்டுச்சாணம்

திருமங்கலம்: மதுரை மாவட்டம் பேரையூர் பகுதிகளில் இருந்து ஏலத்தோட்டங்களில் உரமாக பயன்படுத்த ஆட்டுச் சாணத்தை விலைக்கு வாங்கி கேரளா மாநிலத்திற்கு கொண்டு செல்வதால், ஆடு வளர்ப்போர் கூடுதல் வருமானம் பார்க்கின்றனர். இப்பகுதியில் விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு முக்கியத் தொழிலாக உள்ளது.

ஆயிரக்கணக்கில் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளை விவசாயிகள் வளர்க்கின்றனர். பகலில் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகளை இரவில் கொட்டடியில் அடைகின்றனர். சிலர் விவசாய நிலங்களில் கிடை அமர்த்துகின்றனர். இப்படி ஆடு வளர்ப்போர், ஆட்டுச் சாணத்தை சேகரித்து உரத்திற்காக பிளாஸ்டிக், சணல் பைகளில் கட்டி கேரளாவுக்கு அனுப்புகின்றனர்.

தொடர்புடைய செய்தி