திருமங்கலம் அருகே ஆஸ்டின்பட்டி போலீசார் நேற்று முன்தினம் இரவு வேடர் புளியங்குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது டூவீலரில் வந்த வாலிபர் வைத்திருந்த சாக்கில் ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது.
விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த முத்துராஜா 34 எனத் தெரிந்தது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த கஞ்சா மற்றும் டூவீலர் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.