ஜீவாதார கேள்விக்கு அமைச்சர் நகைச்சுவை பதில்: குற்றசாட்டு

67பார்த்தது
மதுரை: முல்லை பெரியார் குறித்து முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் குற்றசாட்டு அறிக்கை:

20. 11. 2014 அம்மா பெற்ற தீர்ப்பில் அணையின் நீரை 142 அடியாக தேக்கி கொள்ளலாம். பேபி அணையை பழுது பார்க்கப்பட்டது 152 அடியாக தேக்கி கொள்ளலாம் என்று தீர்ப்பை பெற்று மூன்று முறை அம்மா ஆட்சி காலத்தில் 142 அடியாக தேக்கி அணை பாதுகாப்பாக என்று உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முல்லைப் பெரியாரில் 1500 கோடியில் புதிய அணை கட்ட கேரளா அரசு திட்டம் தயாரித்த போது இதன் மூலம் நமது ஜீவாதார உரிமை பறிபோகும் அதே போல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி 152 அடியாக உயர்த்த வேண்டும்.

நமது உரிமை பறிபோகிறது அரசு கள்ள மவுனதுடன் இருக்கிறது இந்த மர்மத்தின் விடை எப்போது உலகம் அறியும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அமராவதி பிரச்சனை, பாலாறு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு எடப்பாடியாரும், முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணியும் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள், எந்த அளவுக்கு இந்த பிரச்சனைக்கு முக்கியத்துவம் காட்டுகிறார்கள் என்பதை அந்த பதிலே நாம் அறிகிற போது இதை நீர்வளத்துறை அமைச்சர் எப்போதும் போல இதை நகைச்சுவையாக பதில் சொல்லி கடந்து செல்கிறார்.

நாட்டு மக்களுடைய ஜீவாதார உரிமை பிரச்சினைகளை மிகுந்த அக்கறையோடு கவனத்தோடு கையாள வேண்டும், உரிமை நிலை நாட்ட வேண்டும் என்று தான் மக்கள் கேட்கின்றார்கள் என்றார்.

தொடர்புடைய செய்தி