மென்மை போக்கை கடைபிடித்தால் ஆர்ப்பாட்டம்: ஆர்பி உதயகுமார்

50பார்த்தது
முல்லைப் பெரியாறு பிரச்சனையில் திமுக அரசு தொடர்ந்து மென்மை போக்கை கடைபிடித்தால் எடப்பாடியார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம்:
ஆர்பி உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியது

மதுரை , தேனி , திண்டுக்கல் உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகளின் குடிநீர் பிரச்சனைக்கும் , விவசாயத்திற்கும் தேவையானது முல்லைப் பெரியாறு ஆகும், இந்த முல்லை பெரியாரின்  புரட்சித்தலைவி அம்மா தொடர் சட்டப் போராட்டம் நடத்தி அணையை 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம், அணையை பழுது பார்க்கப்பட்ட பின் 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்ற தீர்ப்பை பெற்றுதந்தார் எட்டு முறை அணையை ஆய்வு செய்து அணை பலமாக இருக்கிறது என்று நீதியரசர்கள் தீர்ப்பு வழங்கினார்கள் .

கடந்த மூன்று ஆண்டுகளாக கேரளா அரசு அணைக்கட்ட முயற்சிக்கிறது.   திமுக அரசு முல்லைப் பெரியாறு உரிமைக்காக 
எதையும் செய்யவில்லை, திமுக அரசு தொடர்ந்து மெத்தன போக்கை காட்டி வருகிறது.

முல்லைப் பெரியாரில் உரிமையை நிலைநாட்ட கடும் கண்டனத்தை தெரிவிக்காமல் மென்மை போக்கை கடைபிடிக்கிறார் முதலமைச்சர், அங்கு இருக்கும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுகிறார்.

முல்லை பெரியார் உரிமை பிரச்சனையில் அரசு தொடர்ந்து மென்மை போக்கை திமுக அரசு கடைபிடித்தால் எடப்பாடியாரை அழைத்து வந்து மதுரை தேனியில் விவசாயிகள் உரிமையை காக்க மாபெரும் போராட்டம் நடத்த நாங்கள் ஒரு நாளும் அஞ்ச மாட்டோம் என்றார்.

தொடர்புடைய செய்தி