மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே பாண்டாங்குடி சாலையில் நடந்து சென்ற 41 வயதுடைய நபர் மீது இருசக்கர வாகனம் ஒன்று மோதி விபத்தானது. இந்த விபத்தில் அவர் நிகழ்வு இடத்திலேயே உயிர் இழந்தார். இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.