அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

68பார்த்தது
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
டாக்டர் அம்பேத்கரின் 134வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து மதுரை, அவுட்போஸ்ட்டில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் கோ. தளபதி எம்எல்ஏ தலைமையில், உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர் பொன்முத்துராமலிங்கம், மாநில தணிக்கை குழு உறுப்பினர் வேலுச்சாமி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜெயராம், தனசெல்வம், அவைத்தலைவர் ஒச்சுபாலு முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஏகே. ஆறுமுகம், முத்துகணேசன், செய்யதுஅபுதாகீர், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் கோரிப்பாளையம் சிந்து நாகேந்திரன், இலக்கிய அணி மாவட்ட துணை தலைவர் திராவிடமாரி, ஆதிதிராவிடர் நலக்குழு பாலு, பகுதி செயலாளர்கள் அறிவுநிதி, எஸ்எஸ். மாறன், குரும்பன், ராதாகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் குடைவீடு அருண்குமார், வட்டசெயலாளர்கள் ஆர்ஆர். மகேந்திரன், முத்துமோகன், மேலமடைபிரேம், பவர்மணிகண்டன் உள்பட பலர் பங்கேற்றனர். விசிக சார்பில் அம்பேத்கார் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர்கள் ரவிக்குமார், தீபம் என்ற சுடர்மொழி, அரசமுத்துபாண்டியன், நாடாளுமன்ற மேலிட பொறுப்பாளர் சசி என்ற பொன்னானை உள்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி