திருவண்ணாமலை: செய்யாறு, 'சிப்காட்' விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்க ஆதரவாக செயல்படுவதாக கூறி, திமுக எம்.எல்.ஏ. ஜோதி, மற்றும் எம்.பி. தரணிவேந்தன் உருவப்படத்தை எரித்து, விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த செய்யாறு டி.எஸ்.பி. சண்முகவேலன் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.