திருவண்ணாமலை மாவட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகே BSNL தொலைத்தொடர்பு நிறுவனத்தின் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று (பிப். 18) நள்ளிரவு ஏற்பட்ட தீவிபத்தில் கணினிகள், அச்சு இயந்திரங்கள் உள்ளிட்ட சாதனங்களும், முக்கியமான ஆவணங்களும் தீயில் கருகி நாசமாயின. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில் தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.