பணியிடங்களில் பெண் போலீசாருக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து விசாரிக்க, காவல் துறையில் பிரிவு வாரியாக, 'நோடல்' அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ரகசிய விசாரணை நடத்தி டிஜிபி மற்றும் விசாகா கமிட்டிக்கு அறிக்கை அளிக்கவுள்ளனர். அண்மையில் இதுபோன்ற ஒரு புகாரில் ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பெண் போலீசாருக்கு பணியிடங்களில் பாலியல் தொல்லை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.