மாணவிகளுக்கு மலர்கள், கற்கண்டு வழங்கி வரவேற்பு

78பார்த்தது
மதுரையில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் திறப்பு பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு மலர்கள் மற்றும் கற்கண்டு வழங்கி வரவேற்ற மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள


கோடை விடுமுறைக்கு பின்பு இன்று மதுரை மாவட்டத்தில் உள்ள 530க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டது.

இதனையடுத்து இன்று காலை முதலே ஏராளமான மாணவ மாணவிகள் பள்ளிக்கு உற்சாகமாக வருகை தந்தனர்

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பொன்முடியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை முதல் உற்சாகமாக பள்ளிக்கு வருகை தந்த மாணவிகள் தங்களது நண்பர்களை பார்த்து மகிழ்ச்சியில் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்

இதனைத் தொடர்ந்து பள்ளிக்கு வருகை தந்த மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியைகள் கைகளில் பூக்கள் கொடுத்தும் கற்கண்டுகள் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்

தொடர்புடைய செய்தி