மதுவிலக்கு என்பது மாநில அரசின் பட்டியலில் உள்ளது. மதுக்கடைகளை திறப்பது, மூடுவது, மது ஆலைகளை திறப்பது என அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே மதுவிலக்கை அமல்படுத்த வேண்டிய அதிகாரம் மாநில அரசின் கையில் இருக்கிறது. ஆனால் மத்திய அரசு மதுவிலக்கு கொள்கைகளை வகுக்க வேண்டும் என திமுக கூறுவது மக்களை ஏமாற்றும் செயல் என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.