அரசுப் பேருந்தில் ஏர் ஹோஸ்டஸ் போல பணிப்பெண்கள்

74பார்த்தது
அரசுப் பேருந்தில் ஏர் ஹோஸ்டஸ் போல பணிப்பெண்கள்
விமானங்களில் இருக்கும் ஏர் ஹோஸ்டஸ் போல அரசு சொகுசு பேருந்துகளில் பணிப்பெண்களை நியமித்து பயணிகளை கவர மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக மும்பை - புனே வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகளில் 'ஷிவ்நேரி சுந்தரி' என்ற பெயரில் பணிப்பெண்களை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணிப்பெண்கள் பேருந்தில் ஏறும் பயணிகளை வரவேற்பது மற்றும் பயணத்தின்போது பயணிகளுக்கு உதவுவது போன்ற வேலையில் ஈடுபடுவார்கள்.

தொடர்புடைய செய்தி