தற்போதைய காலகட்டத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவது என்பது சவாலான காரியம். மதுவிலக்கு கொண்டு வந்தால் கள்ளச்சாராயம் பெருகும். அதனால் மரணங்களும் ஏற்படும். 2023-2024 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் அரசுக்கு 27.4% வருவாய் கிடைத்துள்ளது. மதுவிலக்கு அமலுக்கு வந்தால் 25%-க்கு மேல் நிதி இழப்பு ஏற்படும். நிதி இழப்பு மற்றும் கள்ளச்சாராய மரணங்களை தடுக்க அரசு முறையான நடவடிக்கைகள் மேற்கொண்ட பின்னர் தான் மதுவிலக்கு பற்றி யோசிக்கவே முடியும்.