மதுரையில் நேற்று பெய்த கனமழை காரணமாக ஆலங்குளம் கண்மாய் நிரம்பி தண்ணீர் வெளியேறியதில் முல்லை நகர், செல்லூர் கட்டபொம்மன் நகர், தத்தனேரி, நரிமேடு உள்ளிட்ட பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியது. சாலைகளில் நேற்று இரவு தொடங்கி தற்போது வரை மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. குடியிருப்புகளை முழுவதுமாக சுற்றி வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.
அத்தியாவசிய பொருட்கள் ஆன பால் உள்ளிட்டவை கூட கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மூன்று மணி நேரம் மழையால் சென்னையை மிஞ்சும் வகையில் மதுரை மாநகர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.