பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மீனாம்பாள்புரம் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொது கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு செல்லூர் ராஜு பேசும் போது,
அதிமுகவை தவிர அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு யாருக்கும் அருகதை இல்லை. அண்ணா பிறந்த கொண்டாடுவது அனைத்து உரிமையும் அதிமுகவிற்கு தான் உள்ளது.
பேரறிஞர் அண்ணா இல்லையென்றால் நாங்கள் இல்லை. எங்களிடம் ஜாதி, மதம் பாகுபாடு கிடையாது.
தமிழகத்தில் 50 ஆண்டுகாலம் திராவிட ஆட்சியில் 31 ஆண்டு காலம் அதிமுக ஆண்டுள்ளது.
அண்ணாவின் அன்பை பெற்றதால் கலைஞர் கருணாநிதி முதலமைச்சரானார். ஆனால் தற்போது திமுக என்றால் கருணாநிதி கம்பெனி என்று ஆகிவிட்டது. கலைஞருக்கு பிறகு ஸ்டாலின் அவருக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின்.
எடப்பாடி பழனிசாமி சாதாரண கிளைச் செயலாளராக அதிமுகவில் பணியாற்றத் தொடங்கி தற்போது பொதுச் செயலாளர் ஆகியுள்ளார்.
பேரறிஞர் அண்ணாவை பெயருக்கு பயன்படுத்திவிட்டு திமுக கம்பெனியை நடத்தி வருகிறார்கள்.
மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு கேஸ் விலை உயர்வு என அனைத்தும் விலை உயர்ந்துள்ளது.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க எடப்பாடி பழனிசாமியை 2026 பொது தேர்தலில் முதலமைச்சராக வேண்டும் என்று பேசினார்.