மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிவராத்திரி முன்னிட்டு இரவு முழுவதும் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் மார்ச் 8-ம் தேதி தொடங்கி மறுநாள் காலை வரை நடக்கவுள்ள சிறப்பு பூஜைகளுக்கான பூஜை பொருட்களை பொதுமக்கள் வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.