மதுரை: ரயில் பயணியின் ஐ-பேட்சாதனத்தை திருடிய இளைஞர் கைது

62பார்த்தது
மதுரை: ரயில் பயணியின் ஐ-பேட்சாதனத்தை திருடிய இளைஞர் கைது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி எஸ்.எம்.கே. தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (43). மென்பொருள் நிறுவன ஊழியரான இவர் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கடந்த மாதம் மனைவி, குழந்தைகளுடன் சென்றார். 

பிப்ரவரி 6-ஆம் தேதி பொதிகை விரைவு ரயிலில் தாம்பரத்திலிருந்து குளிர்சாதனப் பெட்டியில் சிவகாசிக்கு குடும்பத்துடன் பயணம் செய்தார். சிவகாசி ரயில் நிலையத்தில் இறங்கியபோது, வெங்கடேஸ்வரன் வைத்திருந்த ஐ-பேட் சாதனம் அடங்கிய பை மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, மதுரை ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் ரயில் பெட்டியில் ஏறி ஐ-பேட் சாதனம் இருந்த பையைத் திருடிச் சென்றது தெரியவந்தது. 

விசாரணையில் அந்த நபர் மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள பி.அம்மாபட்டியைச் சேர்ந்த பாலமுருகன் (31) எனத் தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி